/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/275_10.jpg)
இசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா சற்குணம்(85) கடந்த 22ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராயர் சற்குணம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய் எஸ்றா சற்குணத்தின் மகன் கதிரொலியிடம் தொலைப்பேசியில் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)