Skip to main content

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
sameer sharm

 

 

அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தியிலிருந்தே பலரும் மீளாமல் இருக்கின்றனர்.

 

இந்நிலையில் பிரபல டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

 

அவருடைய உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்து வரும் மலாட் போலீஸார், சமீர் ஷர்மா இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அதே இயக்குநர் - பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Next Story

சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் - பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் சிறப்பு சலுகை

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
article 370 movie tax free in madhya pradesh

ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 23ஆம் தேதி வெளியான படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் வெளியாவதற்கு முன் படம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார். இப்படம் ட்ரைலர் வெளியான பிறகும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் மத்தியப்பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனை மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “சட்டப்பிரிவு 370-ன் கசப்பான யதார்த்தத்தை மாநில குடிமக்கள் அறியும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் ஆர்டிக்கிள் 370 திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை திறந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளை நெருக்கமாக புரிந்து கொள்ள இந்த படம் உதவுகிறது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கும் மத்தியப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.