tv actor nanjil vijayan arrested

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசி வந்த நிலையில் சூர்யா தேவி மீது வனிதா வழக்கு தொடுத்தார். இதனால், போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளதாக, நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மீது புகார்கொடுத்துள்ளதாகச் சொல்லப்பட்டது.

இதையடுத்து சூர்யா தேவி தன்னை அவதூறாகப் பேசி மிரட்டி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் மீதுவழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் சூர்யா தேவியின் வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் துறையினர் தற்போது நாஞ்சில் விஜயனை கைது செய்துள்ளார்கள். இது சின்னத்திரைவட்டாரத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment