தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் புழுதிவாக்கம்வில்லேஜ் சாலையைச் சேர்ந்த அழகப்பன். பல தொடர்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அழகப்பன் தற்போது கதாநாயகனாகவும் ஒரு தொடரில் நடித்து வருகிறார். அப்படிஒரு தொடரின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூர்மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரது60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளசெல்ஃபோன்தொலைந்து போயுள்ளது.
இதனால்அதிர்ச்சியடைந்த அழகப்பன், கடை ஊழியர்களின்உதவியோடுஅந்த ஜவுளி கடையின் கண்காணிப்பு கேமராவை சோதித்துள்ளார். அதனைப் பார்க்கையில் வாடிக்கையாளர்கள் போல் அங்கு வந்த 2 பெண்கள் மேஜையில் இருந்த அழகப்பனின் செல்ஃபோனை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாகதிரு.வி.க.நகரில் உள்ள காவல்நிலையத்தில்தனது செல்ஃபோனைகண்டுபிடித்து தரச் சொல்லி புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்ஜவுளி கடையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைஆதாரமாகக் கொண்டுவிசாரணை நடத்தி வருகின்றனர்.