'துக்ளக் தர்பார்' படத்தின் தொலைக்காட்சி, ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tughlaq Durbar

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தை லலித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது.

ஆனால், முன்னதாகவே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியதால், படத்தின் ஓடிடி உரிமை விற்பனையில் சிக்கல் எழுந்தது. பின், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த மாதம் 31ஆம் தேதி படத்தின் ட்ரைலரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர் மூன்று நாட்களில் 2.6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 'துக்ளக் தர்பார்' திரைப்படம் மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும், செப்டம்பர் 11ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe