bfnfdndf

Advertisment

விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், அதிதி ராவ், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இதையடுத்து 'துக்ளக் தர்பார்' படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருப்பதாகச் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.

Advertisment

'துக்ளக் தர்பார்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதால், வரும் விநாயகர் சதுர்த்திக்கு இப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இப்படத்தின் ஆடியோ நாளை (ஆகஸ்ட் 18) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.