விஜய்யின் 'வாரிசு' படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்?

trouble for vijay in varisu movie

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="faaa5e44-300e-4595-af1d-a57ef7ec1421" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_2.jpg" />

இப்படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் , "கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற தெலுங்குதிரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் தெலுங்குதிரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான தில்ராஜு, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்,நேரடி தெலுங்கு படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கிவிட்டது போக மீதமுள்ள திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார். எனவே விநியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வாரிசு' படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி சமீபத்தில் இப்படம் நேரடிதமிழ் படம் தான் என்று தெரிவித்திருந்த நிலையில் இப்படம்தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பளார் தில்ராஜு 'வாரிசு' படத்தை தெலுங்கில் வெளியிட அதிக திரையரங்குகளைக் கேட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால்'வாரிசு' படம் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியாவதற்கு சிக்கல்இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் 2019ஆம் ஆண்டு ரஜினியின் 'பேட்ட' பட தெலுங்கு டப்பிங்குக்கும் இந்த சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு முன்னணி நடிகர்கள் பாலகிருஷ்ணாமற்றும் சிரஞ்சீவி படங்களான 'வீர சிம்ம ரெட்டி', 'வால்டர் வீரய்யா' உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vijay dil raju Vamshi Paidipally varisu movie
இதையும் படியுங்கள்
Subscribe