Skip to main content

சூர்யா படம் ரிலீஸாவதில் சிக்கல்... படக்குழு அதிர்ச்சி

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக இருந்த சாஹோ திரைப்படம் வருகிற 30ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

surya

 

 

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்....“நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார். 
 

பிரபாஸுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளிசர்மா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

இந்த படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது என்பதால் அந்த நேரத்தில் வரதாக இருந்த படங்கள் முன்பே ரிலீஸுக்கு தயாரானது. நேர்கொண்ட பார்வை படம் 10ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி என்று ரிலீஸ் தேதியை மாற்றியது. 
 

சாஹோ படத்திற்கு முன்பே ஆகஸ்ட் 30ஆம் தேதி காப்பான் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காப்பான் படம் ரிலீஸ் தேதி தள்ளி வரலாம் அல்லது முன்பே வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு நூறு புலி நகமும் இவன் மாரறைய...” - மிரட்டும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

 Klims of 'Kangwa' released

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

'கல்விக்காக அக்கறையோடு செயல்படும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு'-தமிழக முதல்வர் நெகிழ்ச்சி  

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

 

nn

 

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், 'ஏழை எளிய மக்களின் கல்விக்காக தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு. சட்டத் தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது இவை பயிற்சி செய்வது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்ட சத்திய அகாடமியை தொடங்கி வைத்தேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இந்த அகாடமி மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஜெய் பீம் படத்துக்கு பிறகு நீதியரசர் சந்துருவுடன் சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யா, ஞானவேலுக்கு எனது பாராட்டு' என தெரிவித்துள்ளார்.