எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.சரவணன், த்ரிஷாவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள படம் 'ராங்கி'. லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாவதாகப் படக்குழு அறிவித்ததுபின்னர் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இதையடுத்து இப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தினை தணிக்கை குழுவிற்கு அனுப்புகையில் 30 காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில் ஆக்சன் காட்சிகளில் த்ரிஷா மிரட்டியுள்ளதாகத்தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.