Advertisment

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த த்ரிஷா!

trisha

'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் சரவணன். இவர், தற்போது நடிகை த்ரிஷாவை வைத்து 'ராங்கி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையானது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் கதையாகும். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பனித்துளி' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் வாயிலாக வெளியிட்டார். கபிலன் வரிகளில், சத்யா இசையில், பிரபல பாடகியான சின்மயி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து, பாடலை வெளியிட்டு உதவியதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

actor sivakarthikeyan trisha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe