Advertisment

ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தளித்த த்ரிஷா 

trisha the road movie first look poster release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாதற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனை தொடர்ந்து நடிகை த்ரிஷாஅடுத்ததாகஇயக்குநர்அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோடு' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகை த்ரிஷாதனது 39 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளுக்குதிரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தனது பிறந்தநாள் விருந்தாக தி ரோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைவெளியிட்டுள்ளார். இதனிடையே தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ponniyin selvan tamil cinema trisha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe