Advertisment

''வீட்டில் இருப்பதுக் கூட பரவாயில்லை...ஆனால் இப்படி இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது'' - த்ரிஷா வேதனை!

gfg

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் நடிகை த்ரிஷா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது குறித்து பேசியுள்ளார்.

Advertisment

அதில்... ''நான் ஒரு சுதந்திர பறவை. எப்போதும் தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை. இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

Advertisment
trisha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe