சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

Advertisment

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து எதிர்கொள்ளும் சவால்களை காமெடி கலந்து உணர்வுபூர்வமாக பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, எஸ்.எஸ். ராஜமௌலி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி தற்போது இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இப்படம் ரூ.75 கோடிக்கு மேலாக வசூலித்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு த்ரிஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டிருப்பதாவது, “டூரிஸ்ட் பேமிலி படத்தை தாமதமாக பார்த்தேன். என்ன ஒரு படம், என்ன ஒரு நடிப்பு. சசிகுமார் சார், திரைக்கு உள்ளேயும், வெளியேயும் நல்ல மனம் கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு நீங்கள் தான் வாழும் உதாரணம். எனக்கு பிடித்த நடிகர் சிம்ரன்,  நான் உங்களை சந்தித்த நாளிலிருந்து நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், பகவதி பெருமாள் என்கிற பக்ஸ், கமலேஷ் ஜெகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக இயக்குநர் அபிஷனை உண்மையான மற்றும் அழகான படத்தை உருவாக்கியதாக பாராட்டினர்.