Trisha praise Raangi technical team

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப்மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

Advertisment

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன்.அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

Advertisment

படத்தின் ஸ்டண்ட்மாஸ்டருக்கு நன்றி.நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல.ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.