த்ரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில்நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மேக்கிங் டீசரை த்ரிஷாவின் பிறந்தநாளானகடந்த 4 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் த்ரிஷா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.‘தூங்கா நகரம்’, 'சிகரம் தொடு' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷாநடிப்பதாகவும் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாவதாகவும்சொல்லப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.