Trisha has been granted a Golden Visa  UAE

Advertisment

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில்சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய கோல்டன் விசாவைவழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் த்ரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறும்முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.