trisha do a cameo role in vijay the goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்டுள்ளதகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆறாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கிறார். ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.