Advertisment

சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா

trisha bollywood movie update

பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக்கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தை முடித்து மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார். அங்கு முன்னணி நடிகரான சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத்திட்டமிட்டுள்ளதாகவும் முன்பு தகவல் வெளியானது. அதோடு ஆக்‌ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் த்ரிஷா இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னால் 2010 ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடித்த கட்டா மேத்தா படத்தில் நடித்திருந்தார். இப்படம்அவரின் முதல் மற்றும் கடைசி படமாக இதுவரை இருந்து வருகிறது.

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' படத்தை கைவசம் வைத்துள்ளார்.

Bollywood Salman Khan trisha vishnu varathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe