trisha admk member issue

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்த நிலையில், அப்போது சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், அப்போது கூவத்தூரில் பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி. ராஜுகுற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

அப்போது த்ரிஷா குறித்து அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. திரைத்துறையிலும் பரபரப்பையும் கிளப்பியது. இந்த சூழலில் த்ரிஷா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவிற்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களைப் பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது.கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.எனது வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment