ADVERTISEMENT

டாப்ஸி, ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக த்ரிஷா?

02:36 PM Apr 24, 2019 | santhoshkumar

ஸ்பானிஷ் திரைப்படமான ‘தி இன்விசிபில் கெஸ்ட்’ படத்தை ஹிந்தியில் ‘பத்லா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள். அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். ஷாருக் கானின் ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சுஜய் கோஷ் இயக்கினார். உலகளவில் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட பட்லாவை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும். அதில் டாப்ஸி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்லாவை போல கடந்த 2018ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘அந்தாதுன்’ படமும் செம ஹிட் அடித்தது. இதை சித்தார்த் தமிழில் கண்டிப்பாக ரீமேக் செய்வேன் என்று ட்விட்டரில் ஒருமுறை தெரிவித்தார். பின்னர், சித்தார்த் அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என்று பல செய்திகள் வெளியான நிலையிலும் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வந்த தகவல்களில் த்ரிஷாதான் அந்த கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தபு நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்தும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்கள் இன்றி த்ரிஷா நடித்து முடித்த சதுரங்க வேட்டை-2 , கர்ஜணை உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. 96 மற்றும் பேட்ட ரிலீஸுக்கு பின்னர் பல படங்களில் திரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT