Skip to main content

பரமபதம் விளையாடும் த்ரிஷா 

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
trisha

 

த்ரிஷா நடிப்பில் '96' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'பேட்ட' படத்தில் நடித்து வருகிறார். மேலும் 1818, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் பெரும்பகுதி முடிந்து தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் திருஞானம் பேசியபோது... "இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. 

 

 

 

த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும். த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்" என்றார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.  24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''இனியும் நாம் அமைதி காக்க கூடாது!'' - த்ரிஷா ஆவேசம்! 

Published on 28/08/2019 | Edited on 29/08/2019

திரைப்பட நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவருமான நடிகை த்ரிஷா குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் இன்று  யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியபோது....
 

trisha


''தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000, 2015ல் இது 15000 வழக்குகளாக இருந்து 2016ல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது. குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள், நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்றன. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது.
 

sixer ad


சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில் 40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும். குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.

 

Next Story

"96 படத்த டிவில போட்டப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா?" (வீடியோ)

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

96 படத்தின் மெகா வெற்றிக்காக இயக்குனர் ப்ரேம் குமாருக்கு ஒரு புது புல்லட்டை பரிசளித்துள்ளார் விஜய் சேதுபதி. அந்த எண்ணம் உருவான கதையையும், 96 படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் கட்டியணைத்துக் கொண்டது, தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போது 96 படம்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, 96 படத்தை தெலுங்கில் எடுப்பது என பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ப்ரேம்குமார்.