Advertisment

லாக்டவுனில் த்ரிஷாவை வைத்து இயக்கும் கௌதம் மேனன்!

gvm

கரோனா அச்சுறுத்தல் காரணமாகத்திரைத்துறையே முடங்கியுள்ளது. எந்தவொரு ஷூட்டிங்கும் நடைபெறவில்லை, இதனால் தமிழக திரைத்துறை கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் வீட்டிறுகுள்ளே இருந்துக்கொண்டு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். ஒருசிலர் வீட்டிலிருந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த லாக்டவுன் நேரத்திலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்கி வருகின்றனர் பலர். ஃபேமிலி என்ற குறும்படத்தில் அப்படித்தான் இந்திய சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் நடித்திருந்தார்கள்.

தற்போது முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் த்ரிஷா நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. கௌதம் மேனன் தனது விட்டிலிருந்துகொண்டு வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு அறிவுரைகளை வழங்கி வருவதை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

http://onelink.to/nknapp

இயக்குனர் கௌதம் மேனன் சொல்லச் சொல்ல அதை அப்படியே பின்பற்றி த்ரிஷா படமாக்கி எடிட்டிங்கிற்காக அனுப்பியுள்ளார். விரைவில் இந்தக் குறும்படம் வெளியாகும் என்று தெரியவருகிறது.

gautham menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe