Skip to main content

‘தலைவர் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு... சிசிடிவி கேமராவை ஆஃப் பண்ணுங்க’-பரபரப்பான‘பரமபதம் விளையாட்டு’ட்ரைலர்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய பிரபலங்களில் ஒருவர் த்ரிஷா. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் பணியாற்றும் இவர், தற்போது  ‘பரமபத விளையாட்டு’ என்னும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இது த்ரிஷாவுக்கு 60 வது படம் ஆகும்.
 

trisha

 

 

தற்போது த்ரிஷா நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் அரசியல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த   ‘பரமபத விளையாட்டு’. மே 4ஆம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
 

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 

தமிழகத்தில் நடந்த சில முக்கியமான அரசியல் நிகழ்களை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்