Advertisment

ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிட்ட குறும்படம்!

bffhfh

இளம் இயக்குநர்களின் திரை கனவுகளை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில்,உதவி இயக்குநர்களின் சிறந்த கதைகளைக் குறும்படங்களாக தயாரிக்க ஆரம்பித்துள்ளது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம். இந்த வகையில் தயாரிப்பாளர் தாய் சரவணன், தனது முதல் தயாரிப்பாக நான்கு குறுங்கதைகள் இணையும் சுவாரஸ்யமான ஹைப்பர் லிங்க் திரில்லராக, உருவாகியிருக்கும் 'Triquetra' திரைப்படத்தை இயக்குநர் அசோக் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார்.

Advertisment

'Triquetra' என்பது வாழ்வின் மூன்று முனைகளைக் குறிக்கும் சொல்.நான்கு கதைகள் ஒன்றாக பயணிக்கும் ஹைப்பர் லிங்க் வகையில், கோயம்புத்தூரை பின்னணி களமாகக் கொண்டு திரில்லராக இந்தக் குறும்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை இயக்கியுள்ள இயக்குநர் அசோக், தமிழின் முன்னணி இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். திரைப்படங்களில் உதவியாளர்களாக பணிபுரிந்த நண்பர்களைக் கொண்டு, இந்த திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் வரை இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் புதுமுகங்களே. இக்குறும்படத்தினை, இன்று (14.07.2021) காலை 11 மணிக்குஇயக்குநர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி, துரை செந்தில்குமார், ராம் பிரகாஷ், திரு உள்ளிட்ட ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/MZ_WJvF6_Uo.jpg?itok=5ze937f7","video_url":" Video (Responsive, autoplaying)."]}

directorsuseenthiran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe