Advertisment

“ட்ரிபிள்ஸ்!” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது!

triples

Advertisment

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், சாருகேஷ் சேகரால் இயக்கப்பட்டிருக்கும்தொடர் 'ட்ரிபிள்ஸ்'. இத்தொடரில் ஜெய், வாணி போஜன், விவேக் ப்ரசன்னாமற்றும் ராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும்இந்த 'ட்ரிபிள்ஸ்'இணையத் தொடர்,3 நண்பர்கள், அவர்களது வாழ்க்கை, காதல்மற்றும் காஃபி ஷாப்பில் அவர்களுக்கு நடக்கும் வேடிக்கை கலந்த காமெடி கலாட்டாக்களை சுவாரஸ்யமாகச் சொல்லப்போகிறது.

இத்தொடரின் மூலம், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகும் நடிகர் ஜெய்இத்தொடர் குறித்து, “ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் புத்தம்புதிய தொடரான 'ட்ரிபிள்ஸ்', மூன்று இணைபிரியா நண்பர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சமுடன் விவரிக்கும் கதை. இதனை உருவாக்கியவர்கள் இதன் திரைக்கதையில் கவனம் செலுத்தி, நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடைபோன்று, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் நகைச்சுவையுடன் இதனை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் தங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ள 'ட்ரிபிள்ஸ்'பரபரப்பாக நகரும் வேடிக்கை நிரம்பிய காமெடி கதை. நிச்சயமாக இது என் வாழ்வின் பழைய நினைவுகளைக் கிளறியது!” உங்கள் வாழ்வையும் ஞாபகப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Wb8hqSBMojk.jpg?itok=pt1S2Qf3","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment

இத்தொடரின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் இத்தொடர் குறித்து, ”ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மனதுக்கு மிகவும் பிடித்த பல தொடர்களை உருவாக்கியுள்ளது. நாங்கள் இந்தத் தளத்தின் முதல் தமிழ்த் தொடரான “ட்ரிபிள்ஸ்”தொடரை இதில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். மனம் மகிழ வைக்கும் இந்த முழு நீள நகைச்சுவைத் தொடரில், என் மனத்துக்கு நெருக்கமான தமிழ்ப் பார்வையாளர்கள் தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் தங்கள் வாழ்வில் தொடர்புபடுத்தக் கூடிய சில பாத்திரங்களைப் பார்க்கலாம். இத்தொடரின் வேடிக்கையான வசனங்கள் ரசிகர்கள் அனைவரையும் கடைசிவரை சிரிப்பில் ஆழ்த்தும்” என்று கூறியுள்ளார்.

'ட்ரிபிள்ஸ்'தொடர், வரும் டிசம்பர் 11, 2020 முதல் டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதன்ட்ரைலர்தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

karthik subbaraj hotstar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe