Skip to main content

“ட்ரிபிள்ஸ்!” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

triples

 

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், சாருகேஷ் சேகரால் இயக்கப்பட்டிருக்கும்  தொடர் 'ட்ரிபிள்ஸ்'. இத்தொடரில்  ஜெய், வாணி போஜன், விவேக் ப்ரசன்னா மற்றும் ராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் இந்த 'ட்ரிபிள்ஸ்' இணையத் தொடர், 3 நண்பர்கள், அவர்களது வாழ்க்கை, காதல் மற்றும் காஃபி ஷாப்பில் அவர்களுக்கு நடக்கும் வேடிக்கை கலந்த காமெடி கலாட்டாக்களை சுவாரஸ்யமாகச் சொல்லப்போகிறது.

 

இத்தொடரின் மூலம், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகும் நடிகர் ஜெய் இத்தொடர் குறித்து, “ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் புத்தம்புதிய தொடரான 'ட்ரிபிள்ஸ்', மூன்று இணைபிரியா நண்பர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சமுடன் விவரிக்கும் கதை. இதனை உருவாக்கியவர்கள் இதன் திரைக்கதையில் கவனம் செலுத்தி,  நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடைபோன்று, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் நகைச்சுவையுடன் இதனை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் தங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ள 'ட்ரிபிள்ஸ்' பரபரப்பாக நகரும் வேடிக்கை நிரம்பிய காமெடி கதை. நிச்சயமாக இது என் வாழ்வின் பழைய நினைவுகளைக் கிளறியது!” உங்கள் வாழ்வையும் ஞாபகப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

 

 

இத்தொடரின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் இத்தொடர் குறித்து, ”ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மனதுக்கு மிகவும் பிடித்த பல தொடர்களை உருவாக்கியுள்ளது. நாங்கள் இந்தத் தளத்தின் முதல் தமிழ்த் தொடரான “ட்ரிபிள்ஸ்” தொடரை இதில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். மனம் மகிழ வைக்கும் இந்த முழு நீள நகைச்சுவைத் தொடரில், என் மனத்துக்கு நெருக்கமான தமிழ்ப் பார்வையாளர்கள் தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் தங்கள் வாழ்வில் தொடர்புபடுத்தக் கூடிய சில பாத்திரங்களைப் பார்க்கலாம். இத்தொடரின் வேடிக்கையான வசனங்கள் ரசிகர்கள் அனைவரையும் கடைசிவரை சிரிப்பில் ஆழ்த்தும்” என்று கூறியுள்ளார்.

 

'ட்ரிபிள்ஸ்' தொடர், வரும் டிசம்பர் 11, 2020 முதல் டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 


 


   

சார்ந்த செய்திகள்

Next Story

ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வரும் ஹார்ட் பீட் சீரிஸ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Heartbeat series streaming on Hotstar

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வரும் சபா நாயகன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
ashok selvan saba nayagan streaming in hotstar

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர்  நடிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியான படம் சபா நாயகன். க்ளியர் வாட்டர் பிலிம்ஸ் மற்றும் ஐ சினிமா கேப்டன் மெகா என்டர்டெயின்மென்ட் என்ற இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.  

ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் காமெடி கலந்து சொல்கிறது இப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது.