முத்தலாக் கூறி பிரபல நடிகையை விவாகரத்து செய்த கணவர்...

அலினா ஷேக், பிரபல போஜ்புரி நடிகையான இவர் 2016ல் முதஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் தன்னை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்துவிட்டார் என்று அலினா குற்றம்சாட்டியுள்ளார்.

aleena sheik

இதுகுறித்து அலினா ஷேக் கூறியது. “இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டு எனது கணவர் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதனால் கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தேன். அதன்பின்பு அவருக்கு எதுவும் ஆகவில்லை, நலமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

ஆனாலும், அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. பத்து நாட்களுக்கு பிறகு ரூ.100 முத்திரைத்தாளில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவாகரத்தை என்னால் ஏற்க முடியாது. இதுபற்றி போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் மறுத்தனர்.

கணவர் வீட்டில் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்கள். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததில் இருந்து இந்த கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். அப்போதும் போலீஸில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் அப்போது எனது கணவர் தடுத்துவிட்டார்.” என்றார்.

triple talaq
இதையும் படியுங்கள்
Subscribe