சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில் இவர் மீது திருநங்கை ஒருவர் பரப்ரப்பு புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ள அவர், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “என்னுடைய பெயர் வைஷு. நான் நடிகையாவும் இருக்கிறேன். நாஞ்சில் விஜயன், என் கூட கடந்த 7 வருஷமாக தொடர்ந்து தொடர்பில் இருந்தார். ஆனால் 6 மாதத்திற்கு முன்பு இனிமேல் என்னால் உன்னுடன் பழகமுடியாது என சொல்லிவிட்டார். இது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.
திருமணம் ஆவதற்கு முன்பே நாங்க ரெண்டு பேரும் லவ பண்ணோம். ஆனால் அது அவங்க குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அவருடன் நான் உடல்ரீதியாகவும் ஒன்றாக இருந்திருக்கேன். ஒரு பெண் என்றால் அவள் கர்ப்பமாவதை ஆதாரமாக காண்பிக்க முடியும். ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதால் எதை ஆதாரமாக காட்ட வேண்டும் என தெரியவில்லை. என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஆசை வார்த்தை காட்டிவிட்டு பின்னால் திருநங்கை என்பதால் சமூகத்தில் தன் இமேஜ் கெட்டு போய்விடும் என சொல்லி பிரிந்துவிட்டார். என் நம்பரையும் பிளாக் பண்ணி வைச்சிட்டார். அவரிடம் பேச முடியவில்லை.
நான் புகார் கொடுக்க காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் தைரியமாக புகார் கொடுத்த ஜாய் கிரிசில்டா தான். அவங்க தைரியத்தால் தான் எனக்கு புகார் கொடுக்க தைரியம் வந்தது. எனக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்” என்றார். இந்த புகாரை நாஞ்சில் விஜயன் மறுத்துள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.