“அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம்”- டி.ராஜேந்தர் விளக்கம்!

simbu with tr

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சிம்பு, இந்த லாக்டவுன் நேரத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்றொரு குடும்பத்தில் நடித்தார். இந்தப் படம் பல தரப்பு மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் என்கிற வதந்தி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டுப் பெண்ணுடன் திருமணம் நடைபெறப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், டி.ராஜேந்தர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்குப் பொருத்தமான பெண்ணைப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Simbu T Rajendar
இதையும் படியுங்கள்
Subscribe