சி ஆர் டி நிறுவனம் சார்பில் எம்.ஏ. ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் 'நான் கடைசி வரை தமிழன்' .இப்படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள்விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா, சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் தாரை தப்பட்டை முழங்கபூஜையுடன் நடந்தது. பின்னர்டிஜிட்டல் தியேட்டரில்பட பெயர் அறிவிப்பு விழா நடந்தது. இதில் பிரபலஇயக்குநரும், இப்படத்தின் இசை அமைப்பாளருமானடி.ராஜேந்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. அன்புசெல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர் தயாரிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
அப்போது டி.ராஜேந்தர் பேசுகையில், "இந்த படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம்.ஏ. ராஜேந்திரன் கூறினார். ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன், அந்த திறன் இந்த ராஜேந்திரன் இடத்தில் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்த பட டைட்டிலில் தமிழன் என்ற ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். முருகன் என்றால் தமிழ்,நான் கடைசி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது.
இயக்குநர் ராஜேந்திரனிடம்எனக்கு பிடித்தது பிடிவாதம். நானும் பிடிவாதக்காரன். இயக்குநர் இராஜேந்திரனிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க,உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரைதமிழன்னு, சொல்லுங்க,மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க, பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்கஎன்றேன். இல்லை சார். கடைசி வரை தமிழன் தான் எனக்கு பிடித்திருக்கிறதுஎன்றார்.அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு. தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், படத்துக்கு தமிழில் டைட்டில் வைத்திருக்கிறார். அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்" என்றார்.