/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/455_27.jpg)
விஜய்தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.
கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “அரசியல் என்பது பொது மொழி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பற்றிய கேள்விக்கு இப்போது நான் பண்ணவில்லை விமர்சனம். கடவுள்கிட்ட கேட்கிறதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)