/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-4_17.jpg)
சேத்தனா ராஜ், கன்னடத்தில் 'கீதா', 'தொரேசனி' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர். திரைத்துறையில் உள்ள பலரும் தங்களது அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். தமிழில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள். அந்த வகையில் இதைப்போலவே கன்னடசின்னத்திரை நடிகையான சேத்தனா ராஜ் தன் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க 'லிபோசக்ஷன்' என்ற அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் 21 வயதான சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார்.
மே 16-ஆம் தேதி காலை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள சேத்தனா ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.பின்பு மாலையில் சேத்தனா ராஜின் நுரையீரலில் நீர் கோர்த்துஉடல்நிலை மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை பற்றி தனது பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் நண்பர்களுடன் சேத்தனா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சையால் இறந்ததாக கூறப்படுகிறது.
சேத்தனா ராஜின் பெற்றோர், எங்கள் மகளின் இறப்பிற்கு மருத்துவமனைதான் காரணம் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.மேலும், "என் மகள் நல்ல உடல்நலத்தோடு முற்றிலும் நன்றாகத்தான்இருந்தாள். பெற்றோர் அனுமதியின்றி, முறையான உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் என் மகள் இறந்துவிட்டாள்" என குற்றம் சாட்டியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)