style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
'வீராசாமி' படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக இயக்குனர் அவதாரம் எடுக்காமல் இருந்த டி. ராஜேந்தர் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளார். லேடி டானாக நமிதா மற்றும் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு 'இன்றைய காதல் டா' என பெயர் சூட்டியுள்ளார்.மேலும் இப்படத்திற்கும் வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தர் கவனிக்கவுள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">