Advertisment

மகளிர் தினத்தில் சர்பிரைஸ் அளிக்கும் தமிழ்ப்படம் 

tp

ஸ்பூப் வகை படமான 'தமிழ்ப்படம்' கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில் சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிகின்றனர். மேலும் முதல் பாகத்தில் நாயகியாக நடித்திருந்த திஷா பாண்டே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் இருந்து ரொமாண்டிக் சிங்கிள் பாடல் வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. என்.கண்ணன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகர் மாதவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். மேலும் இப்படம் வருகிற ஜூலை மாதம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment
tamizhpadam2 shiva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe