tp gajendran tested positive covid19

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

Advertisment

அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான டி.பி கஜேந்திரனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு(5.1.2022)மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் டி.பி கஜேந்திரன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment