தனுஷ் பட வில்லனுக்கு கரோனா!

tovino thomas

பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார்.

தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக டொவினோ தாமஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது தனிமையில் உள்ளேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. நலமாக உள்ளேன். இன்னும் சில நாட்களுக்கு தனிமையில் இருக்கவுள்ளேன். விரைவில் பணிக்குத் திரும்பி உங்களை மகிழ்விப்பேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். விரைவில் மீண்டு வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

tovino thomas
இதையும் படியுங்கள்
Subscribe