பிரபல மலையாள நடிகரும் தனுஷின் நடிப்பில் வெளியான 'மாரி 2' பட வில்லனுமான டொவினோ தாமஸ் கரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டொவினோ தாமஸ் ஒரு வார காலமாக வீட்டுத்தனிமையில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், தான் கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கம் வாயிலாக டொவினோ தாமஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டேன். நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. தற்போது நலமாக உள்ளேன். தயவு செய்து கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.