ஷூட்டிங் செட் அடித்து உடைப்பு!!! சோகத்தில் நடிகர்...

tovino thomas

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் டோவினோ தாமஸ். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருப்பார்.

தற்போது டோவினோ தாமஸ் ‘மின்னல் முரளி’ என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முதல் கட்ட ஷூட்டிங் வயநாட்டில் நடைபெற்றகொண்டிருந்தபோது, இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கான செட்டை காளடி என்னும் பகுதி அமைத்துள்ளது படக்குழு.

“இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கு செல்லலாம் என்றிருந்தபோது மொத்த இந்தியாவும் லக்டவுனில் சிக்க, ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக அமைக்கப்பட்ட செட்டை அக்கம்பக்கத்திலுள்ள சிலர் அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் என்ன நோக்கத்துடன் என்ன மனநிலையுடன் இந்த வேலையை செய்தார்கள் என்ற விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதுபோன்ற சம்பவங்களைவட இந்தியாவில்மத அடிப்படைவாதிகள் செய்ததை கேள்விபட்டிருப்போம்.தற்போது நம் இடத்தில் இதுநடந்துள்ளது இதனால் மிகுந்த சோகத்திலும் கோவத்திலும் இருக்கிறேன்” என்று டோவினோ தாமஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

tovino thomas
இதையும் படியுங்கள்
Subscribe