tovino thomas

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் டோவினோ தாமஸ். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தமிழில் வெளியான 'மாரி 2' படத்தில் தனுஷுக்குவில்லனாக நடித்திருப்பார்.

Advertisment

தற்போது டோவினோ தாமஸ் ‘மின்னல் முரளி’ என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான முதல் கட்ட ஷூட்டிங் வயநாட்டில் நடைபெற்றகொண்டிருந்தபோது, இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கான செட்டை காளடி என்னும் இடத்தில்அமைத்துள்ளது படக்குழு. ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்தது. இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, வலதுசாரி அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ‘செட்’டை சேதப்படுத்தினர்.

Advertisment

அந்தராஷ்ட்ர ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இதற்குப் பொறுப்பேற்றன. ஆதி சங்கராச்சாரியார் மடத்துக்கு அருகில் இந்த ‘செட்’ அமைக்கப்பட்டிருப்பதாக அவை காரணம் கூறின. இந்தச் சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்தது. பிரபலங்கள் பலர் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் படத்தின்ஹீரோ டோவினோ தாமஸ், இந்தச் சம்பவத்தால் மிகவும் சோகத்திலும் கோபத்திலும் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

இந்நிலையில் ரதீஷ் மலயத்தூர் (ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர்), ராகுல் ஆகிய இருவரை கேரள போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment