tovino thomas manju warrier thanked army officers regards wayanad landslide issue

கேரளாவில் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலச்சரிவின்போது இராணுவ வீரர்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியிலும், நிவாரணா பொருள் வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரித்தனர். இதனிடையே பல திரைத்துறைப் பிரபலங்கள் கேரள மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி இருந்தனர். அந்த வகையில் விக்ரம் ரூ. 20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், தனுஷ் ரூ.25 லட்சம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினர். மேலும் மலையாள திரையுலகிலிருந்து மோகன்லால் ரூ.3 கோடி மற்றும் மம்மூட்டி ரூ.20 லட்சமும், அவரது மகன் துல்கர் சல்மான் ரூ.15 லட்சமும் நன்கொடை வழங்கினர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி - ராம் சரண் இருவரும் இணைந்து ரூ.1 கோடி மற்றும் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்கினர். இதனை தொடர்ந்து எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள காங்கிரஸ் கமிட்டியின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை நேற்று வழங்கியிருந்தார்.

இந்நிலையில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோர் நிலச்சரிவில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராம் பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு, நமது ஜவான்களின் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் போற்றும் வகையில் 122 காலாட்படை இராணுவ வீரர்களை சந்தித்ததில் முழுமையான மகிழ்ச்சியும் மரியாதையும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் மஞ்சு வாரியர், ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவிருந்த தன்னுடைய ‘ஃபுட்டேஜ்’ (Footage) படத்தின்ரீலிஸ்தேதியைதள்ளிவைத்திருந்தார். அதன் பின்பு இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகியது. இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘விடுதலை 2’ படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் டொவினோ தாமஸும், தான் நடித்துள்ள ஏ.ஆர்.எம். திரைப்படத்தின் ரிலீஸ்அறிவிப்பைதள்ளிவைத்திருந்தார். இப்படம் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.