tovino thomas injury

Advertisment

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'மாரி 2' படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான '2018' என்ற மலையாள படம் சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. பின்பு தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் மல்லுவுட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்போது நடிகர் திலகம் என்ற தலைப்பில் லால் ஜே.ஆர் இயக்கத்தில் தற்போது மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா பெரும்பாவூர் மாறம்பள்ளி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் டோவினோ தாமஸுக்கு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில் அவருக்கு காலில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக மலையாள சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றன.