நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் 'அதிரடி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது.பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் (Doctor Ananthu Entertainments) இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

'மின்னல் முரளி' படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான அருண் அனிருதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் மூலம், டொவினோ தாமஸ், பசில் ஜோசப், சமீர் தாஹிர், மற்றும் அருண் அனிருதன் அடங்கிய 'மின்னல் முரளி' கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது.
படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதையை பவுல்சன் ஸ்காரியா மற்றும் அருண் அனிருதன் இணைந்து எழுதியுள்ளனர். சமீர் தாஹிர் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisment

பல மொழிகளில் வெளியான டைட்டில் டீசரில் முதலில் வினீத் ஸ்ரீனிவாசனின் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அதனைத் தொடர்ந்து, பசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முழு மாஸ் கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். 'அதிரடி' ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெயினராக திரையரங்குகளை அதிரவைக்கும் என்று டீசர் உறுதியளிக்கிறது. மேலும், மூவரும் தோற்றத்திலும், குணத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை சித்தரிக்கவுள்ளதாகத் தெரிகிறது. டீசரின் பஞ்ச்லைன், அதிரடியான திரையரங்க அனுபவத்திற்கு குழு தயாராகி வருவதைக் காட்டுகிறது.

பிரம்மாண்டமான தென்னிந்திய திரைப்பட டைட்டில் அறிவிப்பு பாணியில் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்துடன் சேர்த்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment