tovino thomasd

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். பல வெற்றி படங்களை தொடர்ச்சியாகக் கொடுத்த இவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

லாக்டவுனில் இவர் நடிப்பில் உருவான சூப்பர் ஹீரோ படம், 'மின்னல் முரளி'ட்ரைலர் வெளியாகி செம வைரலானது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது டோவினோ தாமஸ் நடித்து வரும் படம் ‘கள’. இந்த படப்பிடிப்பின்போது சண்டை காட்சியில் ஸ்டண்ட் மேன் வயிற்றில் உதைத்துள்ளார். அப்போது, வலியைப் பொறுத்துகொண்டு, நடித்துள்ளார் டோவினோ. ஆனால், அந்த வலி அடுத்த நாளும் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அப்போது, வயிற்றுக்குள்ளே காயம் ஏற்பட்டு இரத்தம் கசிவது தெரியவந்துள்ளது.

Advertisment

இதனால், உடனடியாக மருத்துவர்கள்அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். தற்போது ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.