/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/77_59.jpg)
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள '2018' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிடப்பட்டிருந்தது.கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.140 கோடியும், கேரளாவில் மட்டும் ரூ.73 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தபோதுதமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகம் வந்த 2018 படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்குவருகை தந்தனர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து டோவினோ தாமஸ் பேசுகையில், "இப்படம் கேரளாவில் வெளியாகி 3 வாரம் கடந்த நிலையில் அங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும்படம் நன்றாகஇருப்பதாக மெசேஜ்கள் வருகிறது. இப்படம் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படியாக உருவாகியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போதுமக்களிடையே எந்த பாகுபாடும் பார்க்கப்படவில்லை. எல்லாரும் ஒன்றாக இணைந்து தான் அதைஎதிர்கொண்டோம். அந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாகத்தான் இப்படம் இருக்கும்.
சினிமாவை விரும்புகிறவர்கள்கண்டிப்பாக வந்து பார்க்கலாம். வெள்ளப்பெருக்குகாட்சி படமாக்கப்பட்ட போது எனக்கு காதில் சில பிரச்சனைகள்இருந்தது. மருத்துவர்கள் தண்ணீரில் இறங்கவோகாதில் தண்ணீர் படவோ கூடாதென அறிவுறுத்தினர். ஆனால் திரைத்துறையில் அதை சமாளித்து தான் ஆகவேண்டும். என்னால் மற்ற நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. நானும் அடுத்த படத்துக்கு போக வேண்டிய சூழ்நிலை. அதனால் காது வலியோடுதண்ணீருக்குள் இறங்கிநடித்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அந்த காட்சிகள் நன்றாக வந்துள்ளது" எனக்கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)