/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_106.jpg)
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'மாரி 2' படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான '2018' என்ற மலையாள படம் சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. பின்பு தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் மல்லுவுட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்நிலையில் அங்கு முன்னணி நடிகராக இருக்கும் அவர், கொச்சியில் உள்ளபனங்காடு காவல் நிலையத்தில் அவதூறு புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார். அதில், சமூக வலைத்தளப் பக்கத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், தொடர்ந்து ஒருவர், தன்னைத் தகாத வார்த்தைகளில் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், இன்ஸ்டாகிராம் லிங்கை ஆதாரமாகக் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)