tourist family ott update

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து உணர்வுபூர்வமாக பேசியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, எஸ்.எஸ். ராஜமௌலி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் ஜூன் 2ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. படம் தியேட்டரில் வெளியாகி 25 நாட்களை கடந்து ரூ.75 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.