Skip to main content

“ஏதோ ஒன்று குணமடைந்தது” - சூர்யா சந்திப்பு குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் நெகிழ்ச்சி

Published on 23/05/2025 | Edited on 23/05/2025
tourist family director about his meeting with suriya

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பலனாக ஜப்பானில் வருகிற 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படம் பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, எஸ்.எஸ். ராஜமௌலி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

இந்த நிலையில் சூர்யா, படக்குழுவினருக்கு நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை படத்தின் இயக்குநர் 
அபிஷன் ஜீவிந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் எனக்குள் எதோ ஒன்று இன்று குணமடைந்தது. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படம் எந்தளவுக்கு அவருக்கு பிடித்திருந்தது என்பதை பகிர்ந்தார். என்னுள் இருக்கும் பையன் வாரணம் ஆயிரம் படத்தை இன்னும் 100வது முறை பார்க்கிறான். இன்று அந்த பையன் நன்றியுடன் கண்கலங்குகிறான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்