Skip to main content

ஒரே விழாவில் ஒட்டு மொத்த கனவு நாயகிகள்... அதகளம் செய்யும் நடிகர்

Published on 27/05/2022 | Edited on 28/05/2022

 

Top Heroine Are Attending TheLegend Audio Launch

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் உள்ளார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்கியுள்ளனர்.  சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 29-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியீட்டையே மணிரத்னம், ராஜமௌலி போன்ற இந்தியாவின் முன்னணி இயக்குநர்களை வைத்து வெளியிட்ட நம்ம லெஜண்ட் நடிகர் சரவணன் அருள் இசை வெளியீட்டு விழாவில் சும்மா இருப்பாரா என்ன, அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் ரசிகர்களின் கனவு நாயகிகளை இசை வெளியீட்டு விழாவில் களமிறக்கவுள்ளார். இவ்விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ராவ்டேலா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கவுள்ளனர்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

தற்கொலை, சாமியார், திருவிழா; சுந்தர்.சி-யின் அரண்மனை 4

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
sundar c aranmanai 4 trailer released

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.   ட்ரைலரை பார்க்கையில், சுந்தர்.சியின் தங்கையாக தமன்னா வருகிறார். அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்வது போலவும் அது தற்கொலை இல்லை என சுந்தர்.சிக்கு தோன்றுகிறது. தமன்னா மறைவிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவரை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதை திகில் கலந்து காமெடியுடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் அரண்மனையின் முந்தைய படங்களில் வரும் திருவிழா, சாமியார், இரண்டு ஹீரோயின்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.