/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/708_3.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் திலெஜண்ட்என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர்தமிழ்சினிமாவில் நடிகராக அறிமுகம் உள்ளார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்கியுள்ளனர்.சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசிராவ்டேலாநடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 29-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் ட்ரைலர்வெளியீட்டையேமணிரத்னம், ராஜமௌலி போன்ற இந்தியாவின் முன்னணி இயக்குநர்களைவைத்து வெளியிட்ட நம்ம லெஜண்ட் நடிகர் சரவணன் அருள்இசை வெளியீட்டு விழாவில் சும்மா இருப்பாரா என்ன, அதற்குடஃப் கொடுக்கும் வகையில் ரசிகர்களின் கனவு நாயகிகளை இசை வெளியீட்டு விழாவில் களமிறக்கவுள்ளார். இவ்விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ராவ்டேலா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனன், டிம்பிள்ஹயாத்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கவுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)