Advertisment

டாம் குரூஸின் மயிர்ச்கூச்செரியும் சாகசம்

cruise

டாம் க்ரூஸ் தயாரித்து நடித்து 1996 ஆம் வெளியான திரைப்படம் மிஷன் இம்பாசிபிள். ஈதன் ஹன்ட் எனும் உளவுத்துறை ஏஜென்ட்டின் சாகசங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இதுவரை மொத்தம் ஐந்து மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. மிஷன் இம்பாசிபிள் 2, 3, கோஸ்ட் ப்ரோட்டோகால், ரோக் நேஷன் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் ஆறாவது பாகமானஃபால் அவுட்’ 2018 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களைப் போல இதிலும் மயிர்ச்கூச்செரியும் தனிமனித சாகசங்கள், பரபரக்கும் சண்டைக்காட்சிகள், அதிநவீன தொழில்நுட்ப ஆச்சர்யங்கள் இருக்கும் என்பதை காட்டும் விதமாகவே ட்ரெய்லர் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கும் இத்திரைப்படம் ஜுலை 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தையும் டாம் க்ரூஸே தயாரித்திருக்கிறார்.டாம் க்ரூஸ் தயாரித்து நடித்து 1996 ஆம் வெளியான திரைப்படம் மிஷன் இம்பாசிபிள். ஈதன் ஹன்ட் எனும் உளவுத்துறை ஏஜென்ட்டின் சாகசங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இதுவரை மொத்தம் ஐந்து மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. மிஷன் இம்பாசிபிள் 2, 3, கோஸ்ட் ப்ரோட்டோகால், ரோக் நேஷன் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் ஆறாவது பாகமானஃபால் அவுட்’ 2018 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களைப் போல இதிலும் மயிர்ச்கூச்செரியும் தனிமனித சாகசங்கள், பரபரக்கும் சண்டைக்காட்சிகள், அதிநவீன தொழில்நுட்ப ஆச்சர்யங்கள் இருக்கும் என்பதை காட்டும் விதமாகவே ட்ரெய்லர் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கும் இத்திரைப்படம் ஜுலை 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தையும் டாம் க்ரூஸே தயாரித்திருக்கிறார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe